ADDED : ஜன 26, 2026 05:07 AM
- நமது நிருபர் -:
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. முகாமை, கலெக்டர் மனிஷ் நாரணவரே துவக்கி வைத்தார்.
வேலை வாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் ஜோதிமணி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், கல்லுாரி முதல்வர் கதிரேசன் முன்னிலையில் முகாம் துவங்கியது.
தமிழக அரசு வழிகாட்டுதலுடன், திருப்பூர் மாவட்டத்தில், சிறிய மற்றும் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் இதுவரை, 10 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன; மொத்தம், 13 ஆயிரத்து, 932 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நேற்றுமுன்தினம் நடந்த முகாமில், 112 நிறுவனங்களில், 332 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. நிறைவாக, வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணையை, கலெக்டர், மேயர் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.
