/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுதிகளில் சோதனை கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
/
விடுதிகளில் சோதனை கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
ADDED : செப் 22, 2024 06:00 AM
திருப்பூர் : திருப்பூர் நகரப் பகுதியில் வெளி மாநில, வெளி மாவட்டத்தினர் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று பல்வேறு தங்கும் விடுதிகள், மேன்சன்களில் மாநகர போலீசார் சோதனை நடத்தினர். அவ்வகையில் நேற்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தங்கியிருந்த நபரின் அறையில் போலீசார் சோதனை நடத்திய போது, அரை கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், கஞ்சா வைத்திருந்தவர், மதுரையைச் சேர்ந்த தங்க பிரபு, 45 என்பதும், மார்க்கெட்டில் மூட்டை சுமக்கும் பணி செய்வதும் தெரிந்தது.
மேலும் அவர் கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. தெற்கு போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.