ADDED : ஜூன் 15, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராம்கி, 32; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ராயர்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பேக்கிங் வேலை செய்து வருகிறார்.
மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு, 19, விருதுநகரை சேர்ந்த அஜீத், 25, தோப்புராஜா, 21 ஆகிய மூவரும் பல்லடம் அடுத்த, குங்குமபாளையம் பிரிவில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் தங்கி வேலை பார்க்கின்றனர்.
ராம்கிக்கும், மூவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, இதுதொடர்பாக பிரச்னை எழுந்ததில், போதையில் இருந்த மூவரும், ராம்கியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மூவரையும் கைதுசெய்த பல்லடம் போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.