/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வீடியோ கால்' மூலம் கூறிவிட்டு தொழிலாளி தற்கொலை
/
'வீடியோ கால்' மூலம் கூறிவிட்டு தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 07, 2025 10:52 PM
திருப்பூர்; மனைவிக்கு 'வீடியோ கால்' மூலம் தகவல் கூறிவிட்டு, பனியன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். வீரபாண்டி, கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 40; பனியன் தொழிலாளி. திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளன.
அடிக்கடி குடும்பத்தினர், உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகள் கோவில் திருவிழாவுக்கு சென்ற நிலையில், நேற்று அதிகாலை வெங்கடேஷ், மனைவிக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி, அழைப்பை துண்டித்தார்.
தகவல் தெரிந்து செல்லும் போது, வெங்கடேஷ் துாக்கில் தொங்கி இறந்து கிடந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.