/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கார் மீது பைக் மோதி தொழிலாளி பலி
/
கார் மீது பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : டிச 09, 2024 11:39 PM
அவிநாசி; கருவலுாரில் உள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வரும் உ.பி.,யை சேர்ந்த கோவிந்த்குமார், 23, நந்தகுமார் தாஸ், 22 மற்றும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த அமன்குமார், 24.
இவர்கள் மூன்று பேர் நேற்று மாலை ஒரு பைக்கில், மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவிநாசி நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பைக் மோதியது.
இதில், அதே இடத்தில், கோவிந்த்குமார் உயிரிழந்தார். காயமடைந்த நந்தகுமார்தாஸ் மற்றும் அமன்குமார் ஆகியோர் காரின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

