ADDED : மே 11, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; கடத்துார் அமராவதி ஆற்றில், மீன் பிடிக்க சென்ற தொழிலாளி, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், குருவன்வலசு பகுதியை சேர்ந்தவர்கள், கடத்துார் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, ஐயப்பன், 45 (சென்ட்ரிங் தொழிலாளி) மாயமானார். நண்பர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
சந்தேகமடைந்த நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடிய போது, ஐயப்பன் சடலம் மீட்கப்பட்டது. கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.