ADDED : செப் 17, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:திருப்பூர்
மாவட்டம், ஊதியூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக
வேலை பார்த்து வருபவர் வேடியப்பன், 47, இவர் இரு நாட்களுக்கு முன்பு,
குங்காருபாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்சார பிரச்னையை சரி செய்ய
சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு மின் மாற்றியில் வேலை பார்த்து
கொண்டிருந்த போது, வேடியப்பன் மீது மின்சாரம் தாக்கியது. இதில்
கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு கோவை தனியார்
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
