/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலை முயற்சி வழக்கு தொழிலாளிக்கு '10 ஆண்டு'
/
கொலை முயற்சி வழக்கு தொழிலாளிக்கு '10 ஆண்டு'
ADDED : ஜூன் 06, 2025 06:19 AM
பல்லடம்; நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 42. பல்லடம் அடுத்த, கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் மில் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த கவிதா 37 என்பவரும் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 2023ம் ஆண்டு
பிரகாஷ், கவிதாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இதில் படுகாயமடைந்த கவிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கவிதா, காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். பிரகாஷை கைது செய்த போலீசார், பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த பல்லடம் சார்பு நீதிபதி யுவராஜ், நேற்று பிரகாஷூக்கு, 10 ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.