/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுக்கே வந்த நாய் தொழிலாளி பலி
/
குறுக்கே வந்த நாய் தொழிலாளி பலி
ADDED : செப் 02, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரில் டூவீலரின் குறுக்கே தெருநாய் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் பனியன் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர், பாண்டியன் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன், 49; ஜாப்ஒர்க் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கடைக்கு சென்றார். அப்போது, தெருநாய் ஒன்று குறுக்கே வந்தது.
கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று காலை பரிதாபமாக இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.