ADDED : ஜூன் 06, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:சேலம்
மாவட்டம் மணியாங்குண்டத்தை சேர்ந்தவர் இளையராஜா, 23; கூலி
தொழிலாளி.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள எண்ணெய்
ஆலைகளுக்கு, அவ்வப்போது வேலைக்கு வந்து செல்வார். அந்த வகையில்
வேலைக்கு வந்தவர், பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் காங்கேயம்-சென்னிமலை
ரோடு, நெய்க்காரன்பாளையம் வழியாக சேலத்துக்கு, நேற்று முன்தினம்
இரவு, 10:00 மணியளவில் சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு தலைமை
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
