ADDED : டிச 03, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு பங்களா ஸ்டாப் அருகே கடந்த, 18ம் தேதி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை மீட்டு, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர்.
அதில், இறந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த வேல்முருகன், 40. பல்லடத்தில் தங்கி ரயில்வே ஸ்டேஷன் அருகே டீ, காபி, தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து, தேனி, சின்னமனுாரை சேர்ந்த ஜெயக்குமார், 29 என்பவர் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவானஅவரை நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கொலை செய்யப்பட்ட நபரும், கைதானவரும் நண்பர்கள். ஜெயக்குமார் ஒயர் திருட்டு வழக்கில், சிறைக்கு சென்றவர்,கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
முன்விரோதத்தில் கொலை செய்ததாக கூறினார்,' என்றார்.

