தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிலாளிக்கு கத்திகுத்து; 3 பேர் கைது

 தொழிலாளிக்கு கத்திகுத்து; 3 பேர் கைது

 தொழிலாளிக்கு கத்திகுத்து; 3 பேர் கைது


ADDED : ஜன 23, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: முன் பகை காரணமாக, தொழிலாளியை கத்தியால் குத்திய, மூன்று தொழிலாளர்களை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

மேற்கு பல்லடத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார், 27; கூலி தொழிலாளி. பல்லடம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆகாஷ், 19, மேற்கு பல்லடத்தை சேர்ந்தவர் வினோத், 23 மற்றும் இவரது தம்பி ஸ்டீபன், 25 ஆகியோருக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையே முன்பகை இருந்தது.

நேற்று முன் தினம், மதுபோதையில் இருந்த மூவரும் இணைந்து சுரேஷ்குமாரை கத்தியால் தாக்கினர். இதில், தலை கை, முதுகு ஆகிய பகுதிகளில் காயமடைந்த சுரேஷ்குமார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மூவரையும் கைது செய்த பல்லடம் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us