/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளிக்கு சிறை உறுதி; 'அப்பீல்' மனு தள்ளுபடி
/
தொழிலாளிக்கு சிறை உறுதி; 'அப்பீல்' மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 24, 2025 12:18 AM
திருப்பூர்; திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா, 48. திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய, 35 வயது பெண் ஒருவருடன், ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த, 2018 ஜூன் 21ல், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அப்பெண் நடந்து சென்றார். அவரை குறுக்கிட்ட ராஜா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு, அப்பெண் மறுத்தார்.
கோபமடைந்த ராஜா, கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக குத்தினார். காயமடைந்த பெண் சிகிச்சைக்கு பின், உயிர் பிழைத்தார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வீரபாண்டி போலீசார் ராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கில், முதன்மை சார்பு கோர்ட், ராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா, திருப்பூர் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ராஜாவுக்கு, ஏழு ஆண்டு தண்டனையை உறுதி செய்தார். இந்த வழக்கில், அரசு கூடுதல் வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.