தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி சடலம்

பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி சடலம்

பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி சடலம்


UPDATED : ஜூன் 13, 2026 07:36 PM

ADDED : ஜூன் 13, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 07:36 PM ADDED : ஜூன் 13, 2026 07:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர், சிறுபூலுவபட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர் இளையராஜா, 39. பனியன் தொழிலாளி. இவரது மனைவி அனுஷியா. தம்பதிக்கு, மகன், மகள் என, இருவர் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 10ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில், மனைவி கோபித்து கொண்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்றார். மகன், மகளும் ஊருக்கு சென்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.அக்கம்பக்கத்தினர், 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சென்று விசாரித்தனர். உட்புறமாக தாழிட்டு இருந்தது. உள்ளே உடைத்து சென்று பார்த்தனர். இளையராஜா துாக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் உடல் இருந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us