ADDED : ஜூன் 26, 2026 07:05 AM

பல்லடம்: ''தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களை கட்டாயம் சேகரித்து பராமரிக்க வேண்டும்'' என, தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட எஸ்.பி., சிருஷ்டி சிங் அறிவுறுத்தினார்.
பல்லடத்தில் நடைபெற்ற போலீசார்-தொழில் துறையினர் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தொழில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களின் அடையாள அட்டை, புகைப்படம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
பல்லடம் உட்கோட்ட போலீசார் மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.
பல்லடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினர் போலீசார்.
பல்லடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினர் போலீசார்.
