/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரை நோக்கி... பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்
/
திருப்பூரை நோக்கி... பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்
திருப்பூரை நோக்கி... பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்
திருப்பூரை நோக்கி... பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்
ADDED : நவ 02, 2024 11:04 PM
திருப்பூர்: தொழிலாளர்கள், பண்டிகையை முடித்து திருப்பூர் திரும்பிவிட்டதால், நாளை முதல் பனியன் நிறுவனங்கள் பரபரப்பான இயக்கத்தை துவக்க உள்ளன.
திருப்பூரில் உள்ள வெளிமாவட்ட மக்கள், தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, கடந்த, 28ம் தேதி முதல் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அரசு சிறப்பு பஸ்ஸை எதிர்பார்க்காமல், ஐந்தாறு குடும்பங்கள் இணைந்து சுற்றுலா வேன் மற்றும் டூ வீலர்களிலேயே சென்றுவிட்டனர்.அரசு பஸ்களிலும் கூட்டம் குறையவில்லை. அதேபோல், சனிக்கிழமை இரவில் இருந்து வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இன்று காலை புறப்பட்டு வரும் மக்கள் இரவே திருப்பூர் வந்து விடுவர்; சிலர் நேற்று இரவே திருப்பூர் திரும்பி விட்டனர்.
கடந்த, 27ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது; நாளை முதல் பள்ளி, கல்லுாரிகள் இயங்குவதால், அதற்காகவே மக்கள் நேற்றே திரும்பிவிட்டனர். பனியன் நிறுவனங்கள், அவசர ஆர்டர்களை மட்டும் முடித்து விட்டன. ஏற்றுமதி நிறுவனங்களை பொறுத்தவரை, ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கால ஆர்டர் இன்னும் பாக்கியிருக்கிறது. இதனால், மீண்டும் வந்து பரபரப்பான உற்பத்தி பணியை துவக்க உள்ளனர்.
உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி நிறுவனங்கள், தீபாவளியை தொடர்ந்து மூன்று வாரங்கள் வரை பணி குறைவாக இருக்கும். ஒட்டுமொத்த இருப்பும் குறைந்துவிட்டதால், கூடுதல் கையிருப்பு ஆடைகள் தயாரிப்பு பணி மெதுவாக துவங்கும். அதேபோல், சில சந்தைகளுக்கு மட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கான ஆர்டர்கள் வந்த பின், சரக்கை அனுப்ப தயாராகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த திருப்பூர் பனியன் நிறுவனங்களும், முக்கிய ரோடுகளும் நாளை காலை முதல் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு மாறிவிடும் என்கின்றனர் தொழில்துறையினர்.