/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாமிக்கவுண்டம் பாளையத்தில் ரூ.1.1 கோடி பணிகள் நிறைவு
/
சாமிக்கவுண்டம் பாளையத்தில் ரூ.1.1 கோடி பணிகள் நிறைவு
சாமிக்கவுண்டம் பாளையத்தில் ரூ.1.1 கோடி பணிகள் நிறைவு
சாமிக்கவுண்டம் பாளையத்தில் ரூ.1.1 கோடி பணிகள் நிறைவு
ADDED : டிச 27, 2024 11:58 PM
பல்லடம்; பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மி பாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
அமைச்சர் சாமிநாதன் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில், மகளிருக்கு இலவச பஸ், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளன'' என்றார்.
ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி, தாசில்தார் ஜீவா, பி.டி.ஓ.,க்கள் பானுப்பிரியா, கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.