/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
/
சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
ADDED : டிச 04, 2024 10:08 PM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், மாணவர்கள் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உறுதி மொழி எடுத்தனர்.
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் பாதிப்பை தடுப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
* ஆண்டியகவுன்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள், எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்குதல், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கும் சம உரிமை அளித்தல் உள்ளிட்ட உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உறுதிமொழியும் எடுத்தனர்.
* பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் எய்ட்ஸ் தடுப்பு குறியீட்டின் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.
* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
எய்ட்ஸ் பரவும் வழிமுறைகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து ஆசிரியர் கணேசபாண்டியன் விளக்கமளித்தார். மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.