/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக மண் தினம் மாணவர்கள் ஊர்வலம்
/
உலக மண் தினம் மாணவர்கள் ஊர்வலம்
ADDED : டிச 18, 2024 05:28 AM

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், டிச. 5ம் தேதி உலக மண் தினத்தை முன்னிட்டு, ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி தாளாளர் 'நிக்கான்ஸ்' வேலுசாமி தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில், மாணவர்கள், 'மண் வளம் காப்போம், நெகிழியை ஒழிப்போம், மரம் நடுவோம்; மழை வளம் பெறுவோம்; இயற்கை உரங்களை பயன்படுத்துவோம்; உலக உயிர்களை காப்போம்' என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
அம்மன் நகர், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு வழியாக அமர்ஜோதி வீதிகளில் பேரணியாக சென்றனர். மக்காத பொருட்களால் ஏற்படும் தீமைகள்; மக்கும் பொருட்களால் ஏற்படும் நன்மைகள் குறித்த மாதிரி வடிவங்களை உருவாக்கி, பள்ளி வளாகத்தில் வைத்தனர். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.