/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணப்ப நாயனார் குருபூஜை வழிபாடு
/
கண்ணப்ப நாயனார் குருபூஜை வழிபாடு
ADDED : பிப் 08, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், கண்ணப்ப நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தை மாத மிருகசீரிஷ நட்சத்திர நாளான நேற்று, கண்ணப்ப நாயனார் குருபூஜை நடந்தது. சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
கண்ணப்பநாயனாருக்கு, புலித்தோல் போன்ற துணி அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது. சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை, பெரியபுராணம், தேவாரம், திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

