/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலபைரவ ஜென்மாஷ்டமி விழா சிவாலயங்களில் வழிபாடு
/
காலபைரவ ஜென்மாஷ்டமி விழா சிவாலயங்களில் வழிபாடு
ADDED : டிச 13, 2025 07:15 AM

திருப்பூர்: பைரவர்கள் தோன்றிய கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று, சிவாலயங்களில் உள்ள காலபைரவருக்கு ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில்கள் உள்ளிட்ட சிவாலயங்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
எஸ்.பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், காலை, 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, சிவசக்தி கலசஸ்தாபனம், அஷ்டபைரவ கலச ஸ்தாபனம், மூலமந்திரம், 108 சங்கு ஸ்தாபன பூஜைகள் நடந்தது.
காலை, 9:00 மணிக்கு அஷ்டபைரவ வடுகபூஜையும், நிறைவேள்வியும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி அம்மனுக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பைரவருக்கு மகா அபிேஷகம், 108 சங்காபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரும்பாலான சிவாலயங்களில், மாலையில் காலபைரவாஷ்டமி சிறப்பு யாகபூஜையும், தொடர்ந்து மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜையும் நடந்தது.
சிவாலயங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

