/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு
/
சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு
சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு
சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு
ADDED : மார் 29, 2025 06:38 AM
அவிநாசி : சேவூர், கோபி ரோட்டில் வடக்கு வீதியில், முசாபுரி தோட்டத்தில் உள்ள சித்தர் முத்துக்குமார சுவாமி ஜீவ சமாதி அடைந்தார். அதனை தொடர்ந்து, நாள்தோறும் வழிபாடு, தியானம் ஆகியவை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக செவ்வாய், வியாழன் , அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் அதிகாலை முதல் இரவு வரை ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.