/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடிதம் எழுதுங்கள் பரிசை வெல்லுங்கள்
/
கடிதம் எழுதுங்கள் பரிசை வெல்லுங்கள்
ADDED : அக் 18, 2024 06:34 AM
திருப்பூர் : தபால் துறை சார்பில் தேசிய கடிதம் எழுதும் போட்டி, 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதுக்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடக்கவுள்ளது. 'எழுதும் மகிழ்ச்சி', 'டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். கடிதங்களை,' தபால்துறைத்தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் உறையின் மேல் தபால் துறை கடித போட்டி 2024 என கட்டாயம் குறிப்பிட்டு, டிச., 14க்குள் கடிதங்களை அனுப்ப வேண்டும். மாநில அளவில் முதலிடம் பெறும் கடிதத்துக்கு, 25 ஆயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு முறையே, 10 ஆயிரம், 5,000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலக கண்காணிப்பாளரை நாடலாம். அத்துடன், www.indiapost.gov.in என்ற இணையதளத்திலும் விபரம் அறியலாம்.