/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுத்தாளர் குழுமம் சந்திப்பு நிகழ்ச்சி
/
எழுத்தாளர் குழுமம் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : டிச 22, 2025 05:04 AM

திருப்பூர்: கருவம்பாளையத்தில் உள்ள சமரச சன்மார்க்க சங்கத்தில், தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின் 10வது சந்திப்பு நடந்தது.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சந்திப்பு விழா, இம்முறை திருப்பூரில் நடந்தது. வைகை ஆறுமுகம் தலைமை வகித்தார். திருமயம் பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 75க்கும் மேலான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
எழுத்து சார்ந்த விவாதங்கள், சிறப்புரைகள் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது. கதல் நாகராஜன் எழுதிய 'பாரதி 144'; ஆனந்தகுமார் எழுதிய 'நினைவு யாழ்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
ஸ்ரீநிவாஸ் பிரபு தொகுத்து வழங்கினார். திருப்பூர் சாரதி, வடிவேல், மகா உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தனர்.

