/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தவறான தகவல்... நடவடிக்கை தேவை'
/
'தவறான தகவல்... நடவடிக்கை தேவை'
ADDED : அக் 16, 2025 06:00 AM

திருப்பூர்: 'வால்ரஸ்' டேவிட், கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் அளித்த மனு:
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சக்தி தியேட்டர் ரோடு, ஸ்ரீநகர் சந்திப்பு பகுதியில், மின்கம்பி மிக தாழ்வாக செல்கிறது; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்டபோது,'உயரழுத்த மின்கம்பி, 21 அடி உயரம், தாழ்வழுத்த மின்கம்பி 19 அடி உயரத்தில் செல்கிறது' என்று தெரிவித்தனர்.
பொதுமக்கள் முன்னிலையில், அளவீடு செய்த போது, 14 அடி உயரத்தில் மின்கம்பி செல்வது தெரியவந்தது. பிறகு, மின்கம்பத்தை மாற்றி உயரமாக அமைத்தனர். இருப்பினும், சட்டவிதிகளுக்கு முரணாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தவறான தகவல் அளித்த மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.