ADDED : நவ 18, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் கடைவீதியில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் மேற்கொள்வதற்காக கடந்த ஐந்து மாதங்களாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் டிச., மாதம் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, பொங்காளியம்மனுக்கு தாலி வாங்கப்பட்டு, கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. யாகசாலை முகூர்த்தக்கால் நடும் பணி, அக்., 21 அன்று நடந்தது. யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.