
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில், அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா, குரும்பபாளையம் மற்றும் கருவலுாரில் நடைபெற்றது.
அதில், கட்சி கொடியேற்றப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, கட்சியினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
சுப்பிரமணியம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பேரவை ஒன்றிய தலைவர் மூர்த்தி, இளைஞரணி செயலாளர் கனகராஜ், ஐ.டி., பிரிவு செயலாளர் ஹரிஹரன், மாவட்ட பிரதிநிதி கவுதம், திரிபுரசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.