/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருக்கு... ஆனா இல்ல! டிரைவிங் டெஸ்ட் கார் உண்டு: பெட்ரோல் 'டேங்க்' காலி?
/
இருக்கு... ஆனா இல்ல! டிரைவிங் டெஸ்ட் கார் உண்டு: பெட்ரோல் 'டேங்க்' காலி?
இருக்கு... ஆனா இல்ல! டிரைவிங் டெஸ்ட் கார் உண்டு: பெட்ரோல் 'டேங்க்' காலி?
இருக்கு... ஆனா இல்ல! டிரைவிங் டெஸ்ட் கார் உண்டு: பெட்ரோல் 'டேங்க்' காலி?
ADDED : செப் 18, 2025 11:34 PM

திருப்பூர்; தமிழக போக்குவரத்து துறை சார்பில், புதிய வாகனங்கள் பதிவு செய்தல்; தகுதிச் சான்று வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனங்களுக்கு பெர்மிட் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.
அவ்வகையில், இலகு மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தால், வாகனத்தை ஓட்டிக் காட்டி உரிமம் பெற வேண்டும்.
இதற்கு பெரும்பாலும் விண்ணப்பதாரர்கள் டிரைவிங் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, அந்நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டிக் காண்பிப்பர். நேரடியாக விண்ணப்பித்து வருவோர், தங்கள் சொந்த வாகனத்தை ஓட்டிக் காண்பிப்பது வழக்கம்.
இதற்காக வாகனத்தின் பதிவு சான்றிதழும், இதற்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இந்த இரு வகையிலான வாகனங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு உரிய வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இதற்கென வழங்கப்பட்டுள்ள வாகனத்தை ஓட்டிக் காட்டி உரிமம் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு கார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரைப் பயன்படுத்த அதற்கான கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தாலும், அந்த காரைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.
அந்த வாகனத்துக்கு பெட்ரோல் ஒதுக்கீடு இல்லை; அதில் பெட்ரோல் இல்லை என்று கூறி, பயன்படுத்த அலுவலர்கள் அனுமதிப்பதில்லை.
டெஸ்ட்க்கு செல்லும் விண்ணப்பதாரரை அந்த நேரத்தில் டிரைவிங் பயிற்சி பள்ளி வாகனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு ஒரு கட்டணத்தை அவர்களுக்கு வழங்கவும் நிர்பந்திக்கப்படுகிறது.
இதனால், போக்குவரத்து துறையின் வாகனத்தைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தியும், கூடுதலாக பயிற்சிப் பள்ளி வாகனத்துக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விண்ணப்பதாரருக்கு ஏற் படுகிறது.