தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒய்.எப்.ஏ. டிரேடு ஷோ நாளை மாலையுடன் நிறைவு

 ஒய்.எப்.ஏ. டிரேடு ஷோ நாளை மாலையுடன் நிறைவு

 ஒய்.எப்.ஏ. டிரேடு ஷோ நாளை மாலையுடன் நிறைவு


ADDED : மார் 20, 2026 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 10:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், பழங்கரை ஐ.கே.எப். அரங்கில், 'யார்ன் பேப்ரிக் மற்றும் ஆக்சஸரீஸ்' வர்த்தக கண்காட்சி 2026, இரு நாளாக நடந்து வருகிறது.

இது குறித்து கண்காட்சி அமைப்பாளர்கள் கூறியதாவது:

இரு நாட்களில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றனர். இக்கண்காட்சி, துணி மற்றும் ஆடைத்துறைக்கான முக்கியமான 'சோர்ஸிங் மற்றும் நெட்வர்க்கிங்' தளமாக திகழ்கிறது. வாங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் கொள்முதல் மேலாளர்கள் உட்பட, பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று, யார்ன், பேப்ரிக் மற்றும் அசசரீஸ் துறைகளில், சமீபத்திய புதுமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்று உற்சாகமான வணிக தொடர்புகள், பயனுள்ள நெட்வொர்க்கிங் மற்றும் பல ஸ்டால்களில் வலுவான விசாரணைகள் நடைபெற்றன. பார்வையாளர்களின் தரம், தீவிர வணிக நோக்கம் குறித்து கண்காட்சி நிறுவனங்கள், திருப்தி தெரிவித்தன. இது, திருப்பூர் நகரம், இந்தியாவின் முக்கிய ஜவுளி கேந்திரமாக திகழ்கிறது என்பதை, மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறது.

கண்காட்சியின் நிறைவு நாளான நாளை, இதுவரை கண்காட்சியை பார்வையிடாத தொழில் நிபுணர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முன்னணி சப்ளையர்களை சந்தித்து, புதிய டிரெண்டுகளை அறிந்து, பயனுள்ள வணிக உறவுகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us