/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனம் ஒருநிலைப்படுத்த உதவும் யோகா, தியானம்
/
மனம் ஒருநிலைப்படுத்த உதவும் யோகா, தியானம்
ADDED : ஜூன் 21, 2025 12:14 AM

திருப்பூர் : திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் வசந்தி, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர்கள் திருப்பூர், செட்டிபாளையம், ஹார்ட்புல்னெஸ் மையத்தின் கோகிலா, ஒருங்கிணைப்பாளர் பாலா ஆகியோர், பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.
மனநல பயிற்றுனர் ஜானகி, மாணவியருக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் மனநல பயிற்சிகளை செய்து காண்பித்து கூறுகையில், ''இயல்பாக மனதை கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, எதிர்மறையாக தான் வேலை செய்யும்.
யோகா மற்றும் தியானப்பயிற்சி வாயிலாக மனம் ஒருநிலைப்படும். இதனால், கவனச்சிதறல் ஏற்படாது; ஐம்புலன்கள் உட்பட எண்ணமும் நல்ல நிலைக்கு வரும். இதன் வாயிலாக படிப்பு, விளையாட்டு என எதில் ஈடுப்பட்டாலும், அது வெற்றியை தரும்,'' என்றார்.
ஏற்பாடுகளை, ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.