/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யோகா சாம்பியன்ஷிப்; மாணவர்கள் அசத்தல்
/
யோகா சாம்பியன்ஷிப்; மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 08, 2025 11:22 PM

திருப்பூர்; சென்சுரி பள்ளிக்குழுமத்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியான தி ேஹாம் ஸ்கூல் பள்ளியில், யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தி ேஹாம் ஸ்கூல் பள்ளி முதல்வர் ராஜ்குமார், போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த, 15 பள்ளிகளில் இருந்து, 131 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 8, 10, 12, 14 மற்றும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான போட்டிகள், தனித்தனியாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர் களுக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, ஆர்.யு.எச்., காண்டிநியம் பள்ளி வென்றது.
பள்ளி தாளாளர் சக்திதேவி, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வழங்கினார்.