/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
/
மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 24, 2025 03:29 AM
திருப்பூர் : மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுனராக பணிபுரிய விருப்பமுள்ளோர், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க, கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலகிற்கு, இளம் வல்லுனர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ளார். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு தரவு பகுப்பாய்வில் தேர்ச்சி, விரிவான ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரவுகளில் பகுப்பாய்வுத்திறன், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிக்கைகள், விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண்: 423ல் செயல்படும் புள்ளியியல் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் 29ம் தேதிக்குள் தபாலிலோ அல்லது adstpr1@gmail.com க்கு இ-மெயிலில் அனுப்பலாம்.
இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.