/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு இருக்கைகளை மாற்றலாம்
/
மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு இருக்கைகளை மாற்றலாம்
ADDED : டிச 02, 2025 07:10 AM
திருப்பூர்: 'கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பயன்பாடு இல்லாமல், வீணாகி வரும் இருக்கைகளை, மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு இடமாற்ற வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் பிரதான பஸ் ஸ்டாண்டாக, திருப்பூர், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. சமீபத்தில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில் நிறுவ, நுாற்றுக்கணக்கான இருக்கைகளை மாநகராட்சி வாங்கியது. போதிய இருக்கைகள் உள்ளது.
விசேஷ தினங்களை தவிர, பிற நாட்களில் கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு குறைந்தளவு கூட்டம் மட்டுமே வருவதால், 50 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்படாமல், பஸ் ஸ்டாண்ட் உள்வளாகத்தில் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அதிகளவு பயணிகள் தினசரி வந்து செல்லும் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் இன்றி பயணிகள் பஸ்சுக்கு நின்றபடி காத்திருக்கின்றனர். குறிப்பாக பீக்ஹவர்ஸ் நேரங்களில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் டவுன் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். டவுன் பஸ் நிற்குமிடத்தில் இருக்கை இல்லை.
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் வீணாகி வரும் இருக்கைகளை, மத்திய பஸ் ஸ்டாண்டில் பயன்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

