/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு போட்டீங்களே... கோடு போட்டீங்களா!
/
ரோடு போட்டீங்களே... கோடு போட்டீங்களா!
ADDED : செப் 02, 2025 11:20 PM

பல்லடம்: பல்லடத்தில், புதுப்பிக்கப்பட்ட ரோட்டில், வேகத்தடை அமைக்கப்பட்ட நிலையில், வெள்ளைக்கோடு போடாததால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் ஹாஸ்டல் ரோட்டில் இருந்து கொசவம்பாளையம் ரோட்டுக்கு செல்லும் இணைப்புச் சாலை, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ரோட்டில், ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன.
எண்ணற்ற வாகன ஓட்டிகளும் இந்த இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். புதுப்பிக்கப்பட்ட இந்த ரோட்டில், பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடு அடிக்கப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில், வேகத்தடை இருப்பது தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுகிறது.
வழக்கமாக இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருபவர்களே தடுமாறி வரும் நிலையில், புதிதாக இவ்வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, வேகத்தடைகளுக்கு வெள்ளைவர்ணம் பூச வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.