/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 10:38 PM

திருப்பூர்; முதல் கணவர் பிரிந்த நிலையில், 'இன்ஸ்டாகிராம்' காதலரும் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை, 28 வயது பெண் ஒருவர் வந்தார். திடீரென, தான் கொண்டுவந்த கேனிலிருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். போலீசார் ஓடிவந்து, மண்ணெண்ணெய் கேனை பறித்து, அப்பெண் மீது தண்ணீர் ஊற்றினர்.
அப்பெண், அரியலுாரை சேர்ந்தவர்; அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருப்பூரில், சின்னக்கரையிலுள்ள ஒரு விடுதியில் தங்கி பனியன் நிறுவத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம், திருவண்ணாமலையை சேர்ந்த திருமணமாகாத வாலிபருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பத்து மாதங்களாக ஆண்டிபாளையத்தில் வீடு எடுத்து தங்கி, குடித்தனம் நடத்தியுள்ளனர். சில நாட்களுக்குமுன் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் தன்னை முதல் கணவரிடமே செல்லுமாறு கூறியதால் மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். போலீசார் அப்பெண்ணை சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

