/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலி நிவாரணி மாத்திரை விற்ற இளைஞர் கைது
/
வலி நிவாரணி மாத்திரை விற்ற இளைஞர் கைது
ADDED : மார் 29, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மாத்திரையென விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், ராமையா காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 20. இவர் ஆன்லைன் வாயிலாக, வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, போதைய மாத்திரையாக பயன்படுத்தி வந்துள்ளார். தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார், ஜீவானந்தத்தை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, 90 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது; மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், ஆன்லைன் மூலமாக வாங்கி, மற்றவர்களுக்கு போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்ததை கண்டறிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.