ADDED : ஏப் 21, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தாராபுரம், அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 25, மில் தொழிலாளி. ஆன்லைன் செயலி வாயிலாக, இவர் கடன் பெற்றுள்ளார். கடனை முறையாக செலுத்த முடியாததால், கடந்த வாரத்தில் வருத்தத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்தவர், சேலையில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தாய் அளித்த தகவலின்பேரில், சடலத்தை மீட்ட அலங்கியம் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

