ADDED : அக் 26, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் அடுத்த ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, 28, நித்தின்குமார், 28; ஈரோட்டை சேர்ந்தவர் வரதராஜ், 30; வேடசந்துாரை சேர்ந்த விமல், 20; இவர்கள் திண்டுக்கல்லில் உள்ள அக்கா மகன், மகளுக்கு நடக்கும் காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பூரில் இருந்து நேற்று மதியம் சென்றனர்.
தாராபுரத்தில் உள்ள அமராவதி புதிய ஆற்று பாலத்தில் குளிக்க, நான்கு பேரும் சென்றனர். அப்போது, கார்த்தி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

