/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் வெறிச்சோடிய வாக்காளர் முகாம் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
/
மழையால் வெறிச்சோடிய வாக்காளர் முகாம் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
மழையால் வெறிச்சோடிய வாக்காளர் முகாம் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
மழையால் வெறிச்சோடிய வாக்காளர் முகாம் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
ADDED : நவ 17, 2024 05:07 AM

திருப்பூர்: மழை காரணமாக, நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்ய, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளிலும், நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
வாக்காளர்கள், விண்ணப்பம் செய்ய தேவையான படிவங்கள் வைக்கப்பட்டிருந்தன. வரும், 2025 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், 2025 செப், 30 நிலவரப்படி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், படிவம் -6 பூர்த்தி செய்து ஒப்படைத்தனர்.வெளிநாடு வாழ் வாக்காளர் விண்ணப்பிக்க, படிவம் 6 'ஏ' வழங்கப்பட்டது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் விவரத்தை இணைக்க, படிவம் 6'பி' வழங்கப்பட்டது. வாக்காளர் பெயரை நீக்கவும், வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும், படிவம் -7 வழங்கப்பட்டது.
குடியிருப்பு முகவரி மாற்றம், வாக்காளர் பதிவு விவரங்களை திருத்தம் செய்வது, புதிய அடையாள அட்டை பெறுவது, மாற்றுத்திறன் வாக்காளர் என்பதற்கான விபரத்தை பதிவு செய்ய, படிவம் 8 வழங்கப்பட்டது. வாக்காளர்கள், தங்கள் குடும்ப வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்யும் வகையில், நேற்று பட்டியலை பார்வையிட ஆர்வம் காட்டினர்.
பல்லடம், காங்கயம் தொகுதிகளில் பகல் நேரங்களில் அதிக அளவு மழை பெய்தது. மற்ற தொகுதிகளில், இடைவெளியுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், வாக்காளர் வந்து செல்வது குறைவாக இருந்தது. இருப்பினும், புதிதாக பெயர் சேர்ப்பதற்காக, இளைஞர்கள் ஆவண நகல்களுடன் வந்து, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி சென்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,' மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர் வசதிக்காக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமிற்கு வந்து நேரில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் voter helpline என்ற செயலியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்டறிய, 1950 என்ற எண்களை பயன்படுத்தலாம்,' என்றனர்.