ADDED : பிப் 13, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழின் மாண்பு சங்க இலக்கியங்கள்!
உலக மக்களுக்கே உரித்தானது போல், 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற, கணியன் பூங்குன்ற னாரின் புறநானுாற்று பாடல் வரிகள், இன்றும் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் சங்க இலக்கியங்கள், தமிழர்களின் மாண்பைப் பறைசாற்றுபவையாகவும் அமைகின்றன.
திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் நேற்று மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில் நடந்த இளைஞர் இலக்கியத் திருவிழாவில், சங்க இலக்கிய நுால்களின் பெயர்களைத் தாங்கிய விழிப்புணர்வுக்கோலத்தை, மாணவியர் அழகுற வடிவமைத்திருந்தனர்; சிறப்பு, மாணவியரே!