ADDED : நவ 25, 2025 06:51 AM
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் அருகே உள்ள நொய்யல் ஆறு பகுதியில், 40 வயது மதிக்கதக்க ஆண், கடந்த, 19ம் தேதி காயத்துடன் இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றி ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர்.
அதில், கொலை செய்யப்பட்ட நபர் பெருந்துறையை சேர்ந்த விஜயகுமார், 38 என்பதும், போதையில் இருந்த போது, இவரை அடித்து கொன்றது தெரிந்தது. இந்நிலையில், கொலை தொடர்பாக சத்யா, 37, கதிர்வேல், 27 என, இருவர் ஊத்துக்குளி மாஜிஸ்திரேட் முன்னிலையில், சரணடைந்தனர். இருவரையும் ஊத்துக்குளி போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அதில், விஜயகுமாருடன் சேர்ந்து, சத்யா, கதிர்வேல் மற்றும் மாதேஷ் ஆகியோர் மது அருந்தினர்.
போதையில் விஜயகுமார் தகாத வார்த்தையில் பேசினார். இதனால், இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரிந்தது. இருவரும் சொன்ன தகவலின் பேரில், மாதேஷ், 27 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

