UPDATED : செப் 16, 2026 09:49 PM
ADDED : செப் 16, 2026 09:32 PM
திருப்பூர்:திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள புறநகர் காவல் நிலைய கட்டடத்தின் மேல் ஏறி, குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, பஸ் டிரைவர்கள் லாவகமாக மீட்டனர்.
நேற்று காலை கட்டடத்தின் மேல் ஏறிய வாலிபர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். போலீசார் மற்றும் பொதுமக்கள் இறங்குமாறு கூறியும், நீண்ட நேரம் இறங்க மறுத்தார். இதையடுத்து, பஸ் டிரைவர்கள் சிலர் கட்டடத்தின் மேல் ஏறி, அவரை மடக்கிப் பிடித்து பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் யார், எதற்காக இவ்வாறு நடந்துகொண்டார் என்பது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பஸ்ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பஸ் ஸ்டாண்டில் புறநகர் காவல் நிலையக் கட்டடத்தின் மேல் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை லாவகமாக மீட்ட டிரைவர்கள். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
