/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளைஞர்கள் 'வீலிங்' சாகசம் சாலைகளில் விபத்து அபாயம்
/
இளைஞர்கள் 'வீலிங்' சாகசம் சாலைகளில் விபத்து அபாயம்
இளைஞர்கள் 'வீலிங்' சாகசம் சாலைகளில் விபத்து அபாயம்
இளைஞர்கள் 'வீலிங்' சாகசம் சாலைகளில் விபத்து அபாயம்
ADDED : டிச 25, 2024 11:22 PM
பல்லடம்; போக்குவரத்து நிறைந்த பல்லடம், தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில், இளைஞர்கள் சிலர், பைக் ரேஸ் நடத்துவதும், வீலிங் செய்தபடி சாகசம் நிகழ்த்துவதுமான செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
பல்லடம் -- உடுமலை ரோடு வடுகபாளையம் பகுதியில், பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர், முன்பக்க சக்கரத்தை துாக்கிக்கொண்டு, 'வீலிங்' செய்தபடி சென்றார்.
அவ்வழியாக சென்ற இதர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.
பல்லடத்தில் ஏற்கனவே அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நிறைந்த ரோட்டில், 'வீலிங்' செய்தபடி இளைஞர் பைக் ஓட்டிச் சென்றது, விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் படியாக இருந்தது.
நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுத்தும்படியாக, இது போன்ற பைக் சாகசங்களை நிகழ்த்தி வருபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.