/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் ஒய்.எஸ். அகாடமி சாதனை
/
சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் ஒய்.எஸ். அகாடமி சாதனை
ADDED : நவ 16, 2025 12:27 AM

திருப்பூர்: சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் அகில இந்திய அளவில் கோவை மாணவி ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சி.ஏ பவுண்டேஷன் தேர்வில், கோவை ராம் நகரில் செயல்பட்டு வரும் ஒய்.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்ற ஐஸ்வர்யா ஜெகன் என்ற மாணவி இந்திய அளவில், 341 மதிப்பெண் பெற்று ஐந்தாவது இடத்திலும், கோவையில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார்.
இதே அகாடமியில் பயின்று கோவை மாவட்டத்தில், 279 மதிப்பெண் பெற்று ஜனாஸ்ரீ என்ற மாணவி இரண்டாவது இடத்திலும், ரிதன்யா என்ற மாணவி, 273 மதிப்பெண் பெற்று, மூன்றாவது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை ஒய்.எஸ். அகாடமி நிர்வாகிகள் மற்றும் சக மாணவ, மாணவியர் பாராட்டினர்.

