/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல ஜூடோ போட்டி: ஆர்வம் காட்டிய வீரர்கள்
/
மண்டல ஜூடோ போட்டி: ஆர்வம் காட்டிய வீரர்கள்
ADDED : செப் 06, 2025 06:55 AM

திருப்பூர்: திருப்பூரில், நடந்த முதல்வர் கோப்பை ஜூடோ விளையாட்டு போட்டியில் திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவியருக்கான மண்டல அளவிலான ஜூடோ போட்டி நடத்தப்பட்டது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட, 6 மாவட்டங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 140 மாணவர்கள், 116 மாணவியர் பங்கேற்றனர். 6 எடைப்பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
அதே போன்று, கணியூர், எஸ்.வி., உயர்நிலைப்பள்ளியில் கைப்பந்து, பிரன்ட்லைன் பள்ளியில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. முதல்வர் கோப்பையில் பங்கேற்க ஆண்டுக்காண்டு மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதனால், போட்டி முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.