ADDED : ஏப் 12, 2025 01:13 AM
தொழிலாளியை தாக்கிய ஆப்ரேட்டருக்கு வலை
செய்யாறு, செய்யாறு அருகே, குடிநீர் வரவில்லை என புகார் தெரிவித்த தொழிலாளியை தாக்கிய, டேங்க் ஆப்ரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள், 52. இவரது வீட்டில் பஞ்., சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இது குறித்து பெருமாள், பஞ்., நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்படி, டேங்க் ஆப்ரேட்டர் புருேஷாத்தமன், 35, என்பவர் பஞ்., நிர்வாகம் சார்பில் கண்டிக்கப்பட்டார். இதில், ஆத்திரமடைந்த புருேஷாத்தமன், நேற்று முன்தினம் இரவு, பெருமாளிடம் தகராறு செய்து உருட்டு கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த பெருமாள், செய்யாறு அரசு மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள புருேஷாத்தமனை தேடி வருகின்றனர்.
