/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 காவடி ஏந்தி வழிபாடு
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 காவடி ஏந்தி வழிபாடு
ADDED : ஏப் 12, 2025 01:17 AM
அருணாசலேஸ்வரர் கோவிலில்1,008 காவடி ஏந்தி வழிபாடு
திருவண்ணாமலை, ஏதிருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, 1,008 காவடி ஏந்தி பக்தர்கள் மாட வீதி வலம் வந்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்த தலமான, கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து, நேற்று வழிபாடு நடத்தினர்.
அப்போது பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என, பல்வேறு வகையான, 1,008 காவடிகளை ஏந்தி மாட வீதி வலம் வந்து, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.