/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வேன் கவிழ்ந்ததில் குழந்தை பரிதாப பலி
/
வேன் கவிழ்ந்ததில் குழந்தை பரிதாப பலி
ADDED : ஆக 27, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி: ஆரணி அருகே, டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து, குழந்தை பலியான நிலையில், 21 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த, 22 பேர், டாடா சிட்டி ரெய்டு வேனில், புதுச்சேரி பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு நேற்று புறப்பட்டனர்.
காலை, 9:00 மணியளவில் விண்ணமங்கலம் அருகே வேன் சென்றது. அப்போது பின் பக்க டயர் வெடித்ததில் கவிழ்ந்தது. இதில் ஹேமேஸ்வரன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை பலியானது. மற்ற அனைவரும் படுகாயமடைந்தனர்.
அனைவரும் வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.