/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மேல்மா சுற்று வட்டாரத்தில் உதயநிதிக்கு கருப்புக்கொடி
/
மேல்மா சுற்று வட்டாரத்தில் உதயநிதிக்கு கருப்புக்கொடி
மேல்மா சுற்று வட்டாரத்தில் உதயநிதிக்கு கருப்புக்கொடி
மேல்மா சுற்று வட்டாரத்தில் உதயநிதிக்கு கருப்புக்கொடி
ADDED : மார் 27, 2024 12:56 AM

செய்யாறு,:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா மற்றும் சுற்றியுள்ள, 11 கிராமங்களை சேர்ந்த, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை, சிப்காட் விரிவாக்கத்திற்கு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில், 20 விவசாயிகளை கைது செய்து, எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதியில், ஆரணி லோக்சபா தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
அப்போது, உதயநிதி செல்லும் வழியில், வட ஆளப்பிறந்தான் கிராமத்திலும், குறும்பூர் கிராமத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வயலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 'உதயநிதியே திரும்பி போ; தொகுதியை விட்டு வெளியேறு' என, கோஷமிட்டனர்.
'ஒன்பது மாதமாக போராட்டம் நடத்தி வரும் எங்களை கண்டுகொள்ளாதவருக்கு ஓட்டு இல்லை. மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளை பற்றி பிரசாரத்தில் பேசாதது ஏன்... விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவதெல்லாம் நாடகமா; விளைநிலங்களை அழிப்பது தான் திராவிட மாடலா?' என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

