/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
புல் மீது உரசிய கார் தீப்பிடித்து நாசம்
/
புல் மீது உரசிய கார் தீப்பிடித்து நாசம்
ADDED : பிப் 24, 2025 02:42 AM
திருவண்ணாமலை,: வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்வடுகுட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி மற்றும் உறவினர்களுடன், உறவினர் வீட்டுக்கு 'வோல்க்ஸ் வேகன் போலோ' காரில் சென்றார்.
காட்பாடி அடுத்த தொண்டான்துளசி, மோட்டூர் கானாறு பகுதியில் சாலையில் புற்களை காய வைத்திருந்தனர். அதன் மீது கார் சென்றபோது, காய்ந்த புற்கள் இன்ஜினில் உரசி தீப்பிடித்தது.
இதைக்கண்ட ஆரோக்கியம், காரிலிருந்த அனைவரையும் உடனடியாக கீழே இறக்கி விட்டு, தானும் இறங்கினார்.
சிறிது நேரத்தில் அவர்களின் கண் முன்னே கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. காட்பாடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் கார் முழுதும் எரிந்து நாசமானது.

